தேசிய செய்திகள்
தேசத்துரோக சட்டம் குறித்த சட்ட கமிஷனின் அறிக்கை தாக்கல் - மத்திய சட்டத்துறை மந்திரி அர்ஜுன் ராம் மேக்வால் தகவல்
தேசிய செய்திகள்

தேசத்துரோக சட்டம் குறித்த சட்ட கமிஷனின் அறிக்கை தாக்கல் - மத்திய சட்டத்துறை மந்திரி அர்ஜுன் ராம் மேக்வால் தகவல்

தினத்தந்தி
|
2 Jun 2023 11:49 PM IST

‘தேசத்துரோகம் குறித்த சட்ட கமிஷனின் அறிக்கை தொடர்பாக ஆலோசித்து முடிவெடுப்போம்’ - மத்திய சட்டத்துறை மந்திரி தகவல்

புதுடெல்லி,

தேசத்துரோகம் குறித்து சட்ட கமிஷன் ஒரு அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில் தேசத்துரோகம் வழக்கில் குறைந்தபட்ச தண்டனை 3 வருடத்தில் இருந்து 7 வருடம் என பரிந்துரை செய்துள்ளது. இதனிடையே பா.ஜ.க. அரசு தேசத்துரோக சட்டத்தை மேலும் கொடூரமானதாக்க முயற்சி மேற்கொள்வதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

இந்த சட்டம் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக எதிர்க்கட்சிகள் மீது பயன்படுத்தப்படும் என்ற செய்தியை கொடுப்பதாக இருக்கிறது எனவும், கருத்து வேறுபாடுகளை அடக்குதல், அடிபணியச் செய்தல் மற்றும் அமைதிப்படுத்துதல் ஆகியவற்றிற்கான முக்கிய ஆயுதம் எனவும் காங்கிரஸ் கட்சி தனது விமர்சனத்தை வெளிப்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் மத்திய சட்டத்துறை மந்திரி அர்ஜுன் ராம் மேக்வால் இது குறித்து கூறுகையில், ''தேசத்துரோகம் குறித்த சட்ட கமிஷன் அறிக்கை விரிவான ஆலோசனைச் செயல்பாட்டின் படிகளில் ஒன்றாகும். இப்போது நாங்கள் அறிக்கையைப் பெற்றுள்ளோம், நாங்கள் கலந்து ஆலோசிப்போம். ஆலோசனைகளின் கருத்துகளை பெற்று பொது நலனுக்கான நியாயமான முடிவை எடுப்போம்'' என்று தெரிவித்துள்ளார்.



மேலும் செய்திகள்